புபோனிக் பிளேக் நோய் என்றால் என்ன ?

புபோனிக் பிளேக் நோய் என்பது கருப்பு மரணம் அல்லது பிளேக் என்றும் அழைக்கப்படுகிறது. இது பதினான்காம் நூற்றாண்டில் ஐரோப்பாவையும், ஆசியாவையும் தாக்கி ஒரு பேரழிவை ஏற்படுத்திய உலகளாவிய தொற்று நோயாகும். இந்த கொடூர நோயானது, ஐரோப்பாவிற்கு அருகிலுள்ள கிழக்கு வர்த்தக பாதைகளில் உள்ள மக்களை கொன்ற “பெரும் கொள்ளைநோய்” என்று அறியப்படுகிறது.

1340ம் ஆண்டுகளின் முற்பகுதியில், இந்த பிளேக் நோயானது சீனா, இந்தியா, பெர்சியா, சிரியா மற்றும் எகிப்தையும் தாக்கியது குறிப்பிடத்தக்கது. 1347ம் ஆண்டு அக்டோபர் மாதம், பிளாக் கடற்கரையில் இருந்து 12 கப்பல்கள் சிசிலியன் துறைமுகமான மெசினாவில் வந்தபோது பிளேக் நோயானது ஐரோப்பாவில் பரவத்தொடங்கியது. அப்போது, கப்பல்களில் இருந்த பெரும்பாலானோர் இறந்துவிட்டதை கண்டு அதில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், உயிருடன் இருந்தவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, இரத்தத்துடன் கத்திக்கொண்டு இருந்தனர்.

சிசிலியன் அதிகாரிகள் உடனடியாக “மரணத்தை சந்திக்கும் கப்பல்களை” துறைமுகத்திலிருந்து வெளியேறும்படி கட்டளையிட்டனர். ஆனால் அவை மிகவும் தாமதமானதால், புபோனிக் பிளேக் நோய் ஐரோப்பாவில் உடனடியாக 20 மில்லியனுக்கும் அதிகமான மக்களை கொன்றது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பிளேக் நோயானது யெர்சினியா பெஸ்டிஸ் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இது பெரும்பாலும் சிறிய வகை பாலூட்டிகளிலும், அவற்றின் உண்ணிகளிளும் காணப்படுகிறது. மேலும் இந்த நோய், பூச்சிகளின் மூலம் விலங்குகளிடையே பரவுகிறது. பாதிக்கப்பட்ட பூச்சிகள் மனிதர்களை கடித்தாலோ அல்லது பாதிக்கப்பட்ட ஒட்டுண்ணிகளுடன் நமது நேரடி தொடர்பின் மூலம் மனிதர்களுக்கு இந்த தொற்று ஏற்படலாம் என்று கூறியுள்ளது.

பூச்சிகள் கடிப்பதன் மூலம், பிளேக் பேசிலஸ் ஒய். பெஸ்டிஸ் என்ற இந்த நோயானது உடலில் நுழைந்து, பயணிக்கிறது. ‘புபோ’ என்று அழைக்கப்படும் இது, வீக்கமடைந்த நிணநீர் முனையங்களில் பதட்டமாகவும், அதிக வலியையும் ஏற்படுத்தும். மேலும் அதன் மேம்பட்ட வடிவத்தில், வீக்கமடைந்த நிணநீர் முனையங்கள் திறந்த புண்களை தடுக்கும். இருப்பினும், புபோனிக் பிளேக் நோய் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவ முடியாது என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

ஹிஸ்டரி.காம் இன் படி, புபோனிக் பிளேக் ஆசியாவில் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகவும் மற்றும் இது வர்த்தக கப்பல்களால் பரவியது என்றும் கருதப்படுகிறது. இருப்பினும், சமீபத்திய ஆராய்ச்சியில் இந்த கருப்பு மரணத்திற்கு காரணமான நோய்க்கிருமி 3000 பி.சி.க்கு முன்பே ஐரோப்பாவில் இருந்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும், மருத்துவ அறிவியலில் வளர்ச்சியுடன் இந்த நோயாளிகள் சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் சிகிச்சை மூலம் இந்த பிளேக் நோய்க்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. மேலும் இந்த நோய்த்தொற்றை உறுதிப்படுத்த இதன் ரத்தம் அல்லது சீழ் மாதிரியில் ஏற்படும் பாக்டீரியாவை அடையாளம் காண்பதற்கு ஆய்வக சோதனை தேவைப்படுகிறது.

 

Sourced