50  மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம்

தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் உழைக்கும் மகளிருக்கு ரூ.25 ஆயிரம் மானியத்துடன் கூடிய அம்மா இரு சக்கர வாகனங்களை 50 மகளிருக்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

மேலும், கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.1 கோடியே 31 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளுக்கான பூமி பூஜையினை துவக்கி வைத்து, அன்புநகர் பகுதியில் ரூ.7.40 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையையும், குளத்துப்பாளையம் பகுதியில் ரூ.19.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சத்துணவுக் கூடத்தையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

முன்னதாக, கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், சுகுணாபுரம் மேற்கு, பாலக்காடு மெயின்ரோடு பகுதியில் இஸ்லாமியர் சமுதாயத்தினருக்காக ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் சுமார் 1.75 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் மயானத்தின் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, கோவைப்புதூர் பிரிவில், சேலம் – கொச்சின் சாலை கி.மீ.165/8 முதல் 166/6 வரை ரூ.47.50 லட்சம் மதிப்பீட்டில் பாவுதளம் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை, சுண்டக்காமுத்தூர், அன்புநகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7.40 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையையும், குளத்துப்பாளையம் பகுதியில் ரூ.19.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சத்துணவுக் கூடத்தையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

மேலும், கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், நரசிம்மபுரம், பாலக்காடு பிரதான சாலையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15.00 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிக்கும், கோவைப்புதூர் பிரிவு, இ.பி.காலனி பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.52.00 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணிக்கும், சுகுணாபுரம் கிழக்கு பகுதியில் TURIF திட்டத்திலிருந்து ரூ.16.80 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிக்கும் ஆகமொத்தம் ரூ.1 கோடியே 31 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டிலான வளர்ச்சிப் பணிகளுக்கான பூமி பூஜை செய்தும், ரூ.27 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட விநாயகர் கோவில் வீதி பி.கே.புதூர், பள்ளி வீதி, ஆசாத் நகர், சாரமேடு மெயின் ரோடு, பிலால் எஸ்டேட், அல் அமீன் காலனி ஆகிய அனைத்து இடங்களிலும் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக் கூடிய சத்து மாத்திரைகள் அடங்கிய தொகுப்பினையும், கபசுரக் குடிநீரும் பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன், துணை ஆணையாளர் மதுராந்தகி, மாநகரப் பொறியாளர் லட்சுமணன், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் செல்வராசு, செயற்பொறியாளர் ஞானவேல் மற்றும் உதவிப் பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் மண்டல சுகாதார அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.