சுவர்கா பவுண்டேஷன் 2021 காலண்டர் வெளியீடு

சுவர்கா பவுண்டேஷன் 6வது ஆண்டு விழாவையொட்டி தனது 6வது பதிப்பான `நான் சிறப்புமிக்கவன் 2021‘ காலண்டரை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் ரெசிடென்சி ஓட்டலில் அறிமுகம் செய்துவைத்தார்.

சமூக ஆர்வலர் பிரதீக் கண்டேல்வால், சர்வதேச பாரா தடகள வீர்ர் வெங்கடாச்சலம், மாடல் பிரணவ் பக்ஷி, கிராபிக்ஸ் டிசைனர் மற்றும் மகிழ்ச்சி பயிற்சியாளர் டாக்டர் சாய் கஸ்டவ் தாஸ்குப்தா, சர்வதேச பாரா நீச்சல் வீர்ர் சதேந்திர சிங் லோஹியா, உடற்பயிற்சியாளர் டிங்கேஷ் கவுஷிக், ஊனமுற்றோர் உரிமைகளுக்கான ஐ.நா தூதர் பிரதிஷ்ட தேவேஸ்வர், ஆர்.ஜே மற்றும் எழுத்தாளர் திவ்யா சர்மா, மாடல் மற்றும் பேச்சாளர் விராலி மோடி, வழக்கறிஞர் தலைவர் &பாடகர் ஸ்வர்ணலதா ஜே, வீல் சேர் 2015-ன் மிஸ் இந்தியா பிரியா பார்கவா, மிஸ் டெப் ஆசியா 2018 நிஷ்தா துதேஜா ஆகிய பிரபலங்கள் இந்த காலாண்டர் படங்களில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், டெஸ்க்டாப் விருப்பங்களில் கிடைக்கிறது, தேவைக்கேற்ப பெருநிறுவன சின்னங்களை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தரமான காகிதத்தில் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. சமூகவலைதளம் மற்றும் இணையதளத்திற்கு ஏற்ற வகையில் வீடியோவும் தயாரிக்கப்பட்டுள்ளது. காலண்டர் விற்பனை மூலம் கிடைக்கும் அனைத்து வருமானமும் நரம்பு-தசைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிசியோதெரபி மையத்தை அமைக்க உதவும். இது போன்ற சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.