அண்ணா காய்கறி மார்க்கெட் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் மேட்டுப்பாளையம் சாலையில் செயல்படவுள்ள அண்ணா காய்கறி மார்க்கெட்டை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுதலின் காரணமாக மேற்கு மண்டலத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் செயல்பட்ட அண்ணா மார்க்கெட்டானது தற்போது ஜி.சி.டி.கல்லூரியில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

இந்த மார்க்கெட்டு தற்போது அங்கிருந்து அண்ணா மார்க்கெட்டில் செயல்படுவதற்காக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர், கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தவிர்க்கும் பொருட்டு இந்த மார்க்கெட்டில் செயல்படவுள்ள கடைகள் சமூக இடைவெளியை கடைபிடித்து செயல்பட வேண்டும். ஒரு கடை விட்டு ஒரு கடை செயல்பட வேண்டுமெனவும், காய்கறி வாங்க வருபவர்களிடம் காய்கறி விற்பனை செய்வோர் அவர்களிடம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்த வேண்டும். மார்க்கெட்டை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மேற்கு மண்டல உதவி ஆணையாளர் செந்தில்அரசன், உதவி பொறியாளர் கமலக்கண்ணன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் பணி மேற்பார்வையாளர், மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.