நேரு நகர் அரிமா சங்கம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா

கோவை  நேரு நகர் பகுதியில் நேரு நகர் அரிமா சங்கம், கலாம் மக்கள் அறக்கட்டளை மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பினர் இணைந்து நடத்திய காந்தி ஜெயந்தி  விழாவில் பொதுமக்களுக்கு இலவச முகக்கவசங்கள் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

நேரு நகர் அரிமா சங்கத்தின் செயலாளர் அரிமா செந்தில்குமார் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில் சிறப்பு விருந்தினராக மத்திய மண்டல வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் கலந்து கொண்டு அங்கு வைக்கப்பட்டிருந்த காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து விழாவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து SMS – Social distance,Mask,Sanitizing  எனும் மூன்று செயல்களை பொதுமக்கள்  பின்பற்ற வேண்டும் எனவும், இது குறித்த விழிப்புணர்வு வரும் காலங்களில் பொதுமக்களிடையே அதிகரிக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மண்டலத் தலைவர் காளியப்பன், நேரு நகர் அரிமா சங்கத் தலைவர் நந்தகுமார், காளப்பட்டி அரிமா சங்கத் தலைவர்  திவாகர் மற்றும் லேண்ட் மார்க் செமிக், வெங்கடேஷ், யுவராஜ்,  கனகராஜ், காளப்பட்டி ராஜேஷ், லோகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.