காருண்யா பல்கலை.யில் ஃபிட் இந்தியா ஃபிரீடம் ரன் போட்டிகள்

கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் ஃபிட் இந்தியா ஃபிரீடம் ரன் ( Fit India Freedom Run )  போட்டிகள் நடைபெற்றது. மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடையே உடற்பயிற்சி, ஆரோக்கியம் குறித்த    விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தனிநபர் இடைவெளியோடு போட்டிகள் நடைபெற்றது.

மேலும் பொது முடக்கம் காரணமாக மாணவர்கள் அவர்களது இல்லங்களிலே இந்நிகழ்வில் பங்குபெறும்  வகையில் நடைபெற்ற இதில், சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக இதனை டீன் பிரின்ஸ் அருள்ராஜ் மற்றும் மாணவர் நலன் இயக்குநர் அல்போன்ஸ்ராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் அறங்காவலர் ஆனந்த், துணை வேந்தர் மன்னர் ஜவகர், பதிவாளர் எலைஜா பிளசிங் ஆகியோர் வாழ்த்தினர். நிகழ்விற்கான  ஏற்பாட்டை உடற்கல்வி துறை இயக்குநர் காலேப் ராஜன் செய்திருந்தார்.