மிளகாய் வற்றலுக்கு விலை முன்னறிவிப்பு

இந்தியாவில், வாசனை மற்றும் நறுமணப் பயிர்களைப்பின் மொத்த பரப்பளவில், மிளகாய் வற்றல் சுமார் 18 சதவிகிதம் பங்களிக்கின்றது. இந்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் இரண்டாவது முன்கூட்டியே மதிப்பீட்டின் படி (2019- 20, மிளகாய் வற்றல் 6.83 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 17.02 லட்சம் தங்கள் உற்பத்தி செய்யப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் மொத்த மிளகாய் வற்றல் உற்பத்தியில் 75 சதவிகிதம் நம் நாட்டிலே உபயோகிக்கப்படுகிறது. சீனா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு அதிகளவு தரமான மிளகாய் வற்றல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்திய மிளகாயின் நிறம் மற்றும் காரத்தன்மை காரணமாக வணிகத்தில் முக்கியப்பங்கு வகிக்கின்றது.

தமிழகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிளகாய் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இந்த உள்ளூர் வரத்தானது பிப்ரவரி 21 முதல் வரத்தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூழலில், விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்க எதுவாக, தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக்கழகத்தின், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் – விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 15 ஆண்டுகளாக விருதுநகர் சந்தையில் நிலவிய மிளகாய் விலையை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

இந்த ஆய்வுகளின் அடிப்படியில், அறுவடையின் போது தரமான மிளகாய் வற்றலில் சராசரி பண்ணை விலை குவிண்டாலுக்கு ரூ.8500 முதல் 9000 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. குண்டூர் வார்த்தகர்களின் இருப்பிலிருந்து பெறப்படும் மிளகாய் வற்றலைப் பொறுத்து விலையில் மாற்றங்கள் இருக்கும். எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படியில், விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.