எதிர் பார்த்தத விட சிறப்பான ஒரு அப்டேட் வரப்போது

அஜித் ரசிகர்கள் தற்பொழுது ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்பது வலிமை பட அப்டேட் தான். வலிமை படம் குறித்து இயக்குநர் வினோத்தோ, தயாரிப்பாளர் போனி கபூரோ அப்டேட் கொடுப்பதில் ஆர்வம் காட்டாத  நிலையில் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் கார்த்திகேயாவால் அஜித் ரசிகர்கள் தற்போது சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நேர்கொண்ட பார்வையை அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கிறார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்ட வலிமை படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. அஜித் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். அஜித் தொடர்பான காட்சிகளை எடுக்க மட்டும் 30 நாட்கள் தேவையாம். இந்நிலையில் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய கார்த்திகேயாவுக்கு தல ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்கள். இவ்வளவு அன்பை எதிர்பார்க்காத கார்த்திகேயா அசந்து போய் அப்டேட் குறித்த அப்டேட்டை நன்றியாக தெரிவித்துள்ளார்.

வாழ்த்து தெரிவித்த அஜித் ரசிகர்களுக்கு நன்றி கூறி, தனது டிவிட்டர் பக்கத்தில், என் பிறந்தநாள் அன்று அன்பை பொழிந்த தல அஜித் ரசிகர்களுக்கு நன்றி. நான் கடினமாக உழைத்து, அனைவரையும் பெருமைப்படுத்துவேன். கொஞ்சம் பொறுமையா இருங்க. நீங்க எதிர் பார்த்தத விட சிறப்பான ஒரு அப்டேட் வரப் போகுது #Valimai #WaitingForThalaDharisanam என்ன நான் சொல்றது என்று தெரிவித்துள்ளார்.

வலிமை குறித்து ஏதாவது ஒரு அப்டேட் கிடைக்காதா என்று ஏங்கிக் கிடக்கும் அஜித் ரசிகர்களுக்கு கார்த்திகேயாவின் ட்வீட்டை பார்த்ததும் சந்தோஷம் தாங்க முடியவில்லை. இதையடுத்தே #Valimai என்கிற ஹேஷ்டேகுடன் அவர்கள் ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள்.