குப்பை மாற்று நிலையம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்பட வேண்டும்

-மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று 19.09.2020 நடைபெற்றது.

இந்த ஆய்வுக்  கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்ததாவது, கோவை மாநகராட்சியிலுள்ள 5 மண்டலங்களிலும் தூய்மை பணியாளர்கள் மூலம் வீடுவீடாக சென்று சேகரிக்கப்பட்டு வரும் குப்பைகளையும், வாகனங்கள் மூலம் சேகரிக்கப்பட்டுவரும் குப்பைகளையும், பீளமேடு மற்றும் உக்கடம் குப்பை இடமாற்றம் செய்யப்படவுள்ள இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அக்குப்பைகளை கனரக வாகனங்கள் மூலம் வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு குப்பைகளை தரம் பிரிக்கப்பட்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், கோவை மாநகராட்சியில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்கள் செயல்பாடுகள் குறித்தும், குப்பை மாற்று நிலையம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்பட வேண்டுமெனவும், கூடுதலாக வாகனங்கள் மூலம் குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்திட வேண்டுமெனவும், சக்தி சாலையிலுள்ள குப்பை மாற்று நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமெனவும், வீடுவீடாக சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரிக்கப்பட்டு வாகனங்கள் மூலம் கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டது. வணிக வளாகங்களில் மற்றும் கடைகளில் பெறப்படும் மக்கா குப்பைகளை சேகரித்து வாரத்திற்கொருமுறை அப்புறப்படுத்த வேண்டும். தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் ஒளிரும் சீருடைகள் இருப்பதை உறுதிசெய்திட வேண்டுமெனவும், வார்டு வாரியாக உள்ள வீடுகள் மற்றும் குப்பைத் தொட்டிகள் விபரங்கள் மற்றும் அவற்றின் தேவைகளை அறிந்து குறியீடு செய்திட வேண்டுமெனவும், நீர் தேங்கியுள்ள இடங்களில் தூய்மை பணியாளர்கள் மூலம் கொசு மருந்துகள் தெளிக்கப்பட வேண்டும். இறைச்சி மற்றும் கோழி கழிவுகளை தனியாக சேகரிக்கவும், குப்பைகளை சாலைகளில் கொட்ட வேண்டாம் என பெரிய விளம்பர பலகைகளை அவ்விடத்தில் வைத்திட வேண்டுமெனவும் ஆய்வு கூட்டத்தில் தெரிவித்தார்.