ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நடனம்

கோவை புலியகுளம் பகுதி கிட்னி சென்டர் எதிர்புறம், அங்கன்வாடி ஊழியர்கள் இணைந்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்(நான்கு) (போசன்) சிங்காநல்லூர் கிளையின் சார்பில் மக்களிடையே கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் எடுத்து கொள்ள வேண்டிய சத்து மிகுந்த உணவு பொருட்கள் என்னவென்று எடுத்து கூறும் வகையில் “அனைவருக்கும் ஊட்டச்சத்து அதுவே நம் வாழ்வின் சொத்து” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நடனம் ஒன்றை நடத்தினர்.

இதில் கலந்துகொண்ட குழந்தைகள் சத்து மிகுந்த கேரட், வெண்டை, போன்ற காய்கறி வகைகள், முருங்கை, பசலை போன்ற கீரை வகைகளை மாலையாக அணிந்து கொண்டு நடனமாடினர். அதே சமயம் பெட்டி கடைகள் மளிகை கடைகளில் உள்ள திண்பண்டங்களில் கடலை மிட்டாய், எள்ளு உருண்டை, தேன் மிட்டாய், தேங்காய் பருப்பி போன்ற சத்தான தின்பண்டங்களை வாங்கி உட்கொள்ள வலியுறுத்தும் வகையில் பெட்டி கடை ஒன்றை வடிவமைத்திருந்தனர். அந்த பெட்டி கடையில் நம் உடலுக்கு நன்மை பயக்கும் தின்பண்டங்கள்,  புத்தகங்களை வைத்திருந்தனர்.