வில்லியம் பெண்டிங் பிரபு பிறந்த தினம்

பிரிட்டிஷ் இராணுவ வீரர் வில்லியம் பெண்டிங் பிரபு 1774 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.

இவர் ஒரு போர் வீரராக வாழ்க்கையைத் தொடங்கினார். 1803 ஆம் ஆண்டு சென்னையின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்போது சர் தாமஸ் மன்றோ செயல்படுத்திய வருவாய் சீர்திருத்தங்களை ஆதரித்தார்.

இந்திய மக்களின் நலனைப் பேணுவதே இந்தியாவை ஆளும் பிரிட்டிஷாரின் தலையாய கடமை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட முதல் தலைமை ஆளுநர் பெண்டிங் என்பதில் ஐயமில்லை.

வில்லியம் பெண்டிங்கின் ஆட்சியில் ஆங்கிலக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது ஒரு முக்கிய நிகழ்வாகும். வில்லியம் பெண்டிங் பிரபு 1839 ஆம் ஆண்டு பிரான்சில் மறைந்தார்.