கே.பி.ஆர்.கலை கல்லூரியில் நிழற்படக் கலைப் பயிற்சிக் குழுவின் தொடக்க விழா

கோவை கே.பி.ஆர்.கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் நிழற்படக் கலைப் பயிற்சிக் குழுவின் (Photography Club) தொடக்க விழாவானது 12.09.2020 அன்று இணைய வழியில் நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் பாலுசாமி தலைமையேற்றுத் தலைமையுரை வழங்கிச் சிறப்பித்தார். இந்நிகழ்ச்சிக்கு அனுஷ் ஜெயக்குமார், Diploma in professional Photography from light and life academy சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நிழற்படக் கலை என்னை வாழ்வில் எவ்வாறு மாற்றியது என்றும் நிழற்படக் கலையானது என் மனம் கவர்ந்த கலையென்றும் எடுத்துரைத்தார். மேலும், 1941, பிரட்டன் பிரதம மந்திரி வின்சன் சர்ச்சில் அவர்களின் நிழற்பட நிகழ்வை வரலாற்று நிகழ்வாக நினைவுகூர்ந்தார். வாழ்வில் ஒரு நிகழ்வை ஆவணப் படுத்துதல் என்பது, மிகமுக்கிய ஒன்றாகும். எனவே நீங்களும் உங்களுடைய சிறுவயது நிழற்படங்களைப் பற்றிய செய்திகளைச் சேகரித்தீர்களேயானால் ஒவ்வொரு நிழற்படமும் வாழ்வின் ஒரு நல்ல நிகழ்வோடு கூடிய தருனங்களை நமக்கு நினைவுபடுத்தும்.

இன்றைய சூழலில் நிழற்படக் கலையானது அனைத்துத் துறைகளிலும் இடம்பெற்றுள்ளது. அதற்குக் காரணம் அதன் விஸ்வரூபமான வளர்ச்சியாகும். இயற்கை, செயற்கைக்கோள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், வின்வெளிக் களங்கள் மற்றும் திரைப்படத் துறை, மாடலிங் துறை, கட்டிடத் துறை என அனைத்துத் துறைகளிலுமுள்ள பயன்பாடுகளையும் உதாரணங்களுடன் விளக்கினார். நிறைவாக சிறப்பு விருந்தினர் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வினைக் கணினி அறிவியல் துறைப்பேராசிரியர் ரமேஷ் ஒருங்கிணைக்க, கணினி அறிவியல் துறை முதன்மையர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.