மாணவர் மன்ற துவக்க விழா மற்றும் ஆசிரியர் தின விழா

கோவை சரவணம்பட்டியில் உள்ள ஆதித்யா தொழில்நுட்ப கல்லூரியின் மின் அறிவியல் புலம் துறையின் சார்பில், மாணவர் மன்ற துவக்க விழா மற்றும் ஆசிரியர் தின விழா இணையத்தின் வாயிலாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கல்லூரியின் நிறுவனர் சுகுமாரன் தலைமை வகித்தார், கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி சித்ரா மனோகர், கல்லூரியின் முதல்வர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாணவர் மன்ற துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக இன்டர்கனெக்ட் சொல்யுஷனின் ப்ரோகிராம் மேனேஜர் மோகனசுந்திரம் செல்வராஜ் கலந்துகொண்டு பேசுகையில் இன்றைய சூழலில் மாணவர்கள் மூன்று விதமான ‘டி’ யினை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார். (Design,Data,Deep Learning) வடிவமைத்தல், தகவல் சேகரிப்பு, ஆழ்ந்த கற்றல் தரவுகளில் சுயமாக நிர்வகிக்கத் தக்கவாறு பயிற்சியினை முறையாக மேற்கொண்டால் மாணவர்கள் நவீன இந்தியாவினை படைக்கும் திறன் வாய்ந்தவர்களாக உருவாக முடியும் என்றார். அதனைத் தொடர்ந்து மாணவர்களின் பேச்சுப்போட்டி, விநாடி வினா, கவியரங்கம் போன்றவை இணையத்தின் வாயிலாக நடைபெற்றது.

முன்னதாக அனைவரையும் துறைத்தலைவர் கே.ஜி.பார்த்திபன் வரவேற்றார், மாணவர் மன்ற தலைவர் பரமேஸ் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வினோத் மற்றும் துறைசார்ந்த ஆசிரியர்களும், மாணவர்களும் செய்து இருந்தனர்.