கோவையில் இன்றும் புதிய உச்சம்..!

கோவையில் இன்றும் கொரோனா நோய் தொற்று புதிய உச்சத்தை பெற்றுள்ளது. இன்று (4.9.2020) 595 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை கடந்த 5 நாட்களாகவே கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை 500ஐ கடந்து வருகிறது. இந்த சூழலில், கோவையில் இன்றும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோ எண்ணிக்கை புதிய உச்சம் பெற்று 595ஆக பதிவாகியுள்ளது.

அதன்படி, கோவையில் கடந்த 5 நாட்களில் மட்டுமே 2 ஆயிரத்து 937 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் இன்று, சிங்காநல்லூரில் 14 பேர்,  பீளமேட்டில் 24 பேர், குனியமுத்தூரில் 12 பேர், கணபதியில் 13 பேர், மேட்டுப்பாளையத்தில் 18 பேர், சூலூரில் 6 பேர், காரமடை மற்றும் ரத்தினபுரி பகுதியில் தலா 5 பேர் என மொத்த 595 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.

அதன்படி, கோவையில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 865ஆக அதிகரித்துள்ளது.

கோவையில் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் பலியாகினர். இதுவரை கோவையில் 314 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 428 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை கோவையில் 12 ஆயிரத்து 992 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.