17 ஆயிரத்தை கடந்துள்ள கொரோனா பாதிப்பு

கோவை மாவட்டத்தில் 4வது நாளாக இன்றும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 500க்கும் அதிகமாக உள்ளது.

கோவையில் இன்று ஒரே நாளில் 593 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதில் மேட்டுப்பாளையத்தில் 43 பேரும் , காரமடையில் 31 பேரும், சூலூரில் 23 பேரும், துடியலூரில் 19 பேரும், பொள்ளாச்சியில் 12 பேரும், மதுக்கரையில் 11 பேரும், குனியமுத்தூரில் 10 பேரும் உள்பட 593 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 258 ஆக உயர்ந்துள்ளது.

கோவையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதன்படி, கோவையில் இதுவரை வைரஸ் தொற்று தாக்குதலுக்கு உள்ளாகி 318 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும், கோவையில் அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 486 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.