தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் தூய்மைப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மத்திய மண்டலம் டி.கே.காலனி, தெற்கு மண்டலம் ராமமூர்த்தி ரோடு ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை பார்வையிட்டு, அப்பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப்பணியாளர்களிடம் தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறவேண்டுமென தெரிவித்தார்.

பின்னர், அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமெனவும், நோய் எதிர்ப்பு சக்திக்காக வழங்கப்பட்ட மாத்திரைகளை உட்கொள்ள வேண்டுமெனவும், கபசுர குடிநீர் பருகவேண்டுமெனவும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருப்பவர்களுக்கு தேவையான காய்கனி, பால் மற்றும் மளிகை பொருட்கள் கிடைப்பதற்கு தேவையான வசதிகளை செய்திடவேண்டும் என தொடர்புடைய அலுவலர்களிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து, மத்திய மண்டலம் சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் செயல் படுத்தப்பட்டுள்ள சிறப்பு கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்து, அம்மையத்தில் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட விபரங்கள், தொற்றால் பாதிக்கப்பட்டோரின் விபரங்கள், சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் விபரங்களை குறித்து கேட்டறிந்த ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் சொக்கம்புதூரில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு முகாமிற்கு வந்த பொதுமக்களிடம் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், முகக்கவசம் அணியுமாறும், சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமம் இருப்பவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமெனவும், மருத்துவ பரிசோதனை செய்தவர்கள் பரிசோதனையின் முடிவு தெரியும் வரையில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும், கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்திட வேண்டும், கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசின் நெறிமுறைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தந்து நல்கிட வேண்டுமென  தெரிவித்தார்.

இவ்வாய்வின்போது மண்டல உதவி ஆணையர்கள் மகேஷ்கனகராஜ் (மத்தியம்), உதவி செயற்பொறியாளர் சசிப்பிரியா, உதவி பொறியாளர் கருப்புசாமி,  உதவி நகரமைப்பு அலுவலர் செந்தில்பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.