உலக தாய்பால் தின வாரத்தையொட்டி அம்மா சேவா அறக்கட்டளை விழிப்புணர்வு

அம்மா சேவா அறக்கட்டளை சார்பாக உலக தாய்பால் தின வாரத்தையொட்டி விழிப்புணர்வு மற்றும் தாய்மார்களுக்கு தேவையான உணவு பொருட்களும் வழங்கப்பட்டது.

அம்மா சேவா அறக்கட்டளை சார்பாக ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலக தாய்ப்பால் தின வாரத்தையொட்டி கர்ப்பிணி பெண்கள், இளம் தாய்மார்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து கோவையில் உள்ள ராவ் மருத்துவமனையுடன் இணைந்து குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியவை, கடைபிடிக்க கூடாதவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் இந்த கொரோனா கால கட்டத்தில் குழந்தையை வைத்திருக்கும் தாய்மார்கள் குழந்தைகளை எப்படி பராமரிப்பது குறித்தும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சமூக இடைவெளியுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் குழந்தைக்கும் தாய்மாருக்கும் தேவையான உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அம்மா சேவா அறக்கட்டளையின் அறங்காவலர் சோனாலி பிரதீப், ஆஷா ராவ், பார்வதி, தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்.