பிரபாஸ் நடிப்பில் அடுத்த பிரம்மாண்டம் ‘ஆதிபுருஷ்’

பாகுபலி படம் இந்திய அளவில் மிக பிரம்மாண்ட வரவேற்ப்பை பெற்ற பிறகு பிரபாஸுக்கு இந்தியா முழுவதும் அதிகம் ரசிகர்கள் கிடைத்தார்கள். மேலும் பாலிவுட்டில் அவருக்கு மிகப்பெரிய மார்க்கெட் உருவானது. அதனை தொடர்ந்து அவர் நடித்த சாஹோ படமும் தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி ஹிந்தியில் பெரிய அளவில் வெளியிடப்பட்டது. இதையடுத்து பிரபாஸ் தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் ராதே ஷ்யாம் என்ற படத்தில் தீபிகா படுகோன் உடன் இணைந்து நடிக்கிறார்.

இந்நிலையில், பிரபாஸின் 22-வது படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தன்ஹாஜி பட இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ என்ற படத்தில் நடிக்கிறார். இத்திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் இந்தி மற்றும் தெலுங்கில் உருவாகிறது. தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2021ல் தொடங்கி 2022ல் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு இந்திய காவியத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக இருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கும் நிலையில் ராமாயணத்தை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.