முதன் முறையாக காவல் துறையினருக்கென பிரத்யேக முகக்கவசம்

சிவா டெக்ஸ்யார்ன் லிமிடெட் சார்பில், காவல் துறையினருக்கென்று பிரத்யேகமாக அவர்களுடைய சீருடை வண்ணத்தில் தயாரிக்கப்பட்ட சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான 5000 முகக்கவசங்களை கோவை நகர காவல்துறை ஆணையர் சுமித் சரணிடம் சிவா டெக்ஸ்யார்ன் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் எஸ்.கே.சுந்தரராமன் நேரில் வழங்கினார்.

சிவா டெக்ஸ்யார்ன் லிமிடெட் கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டெக்னிக்கல் டெக்ஸ்டைல் துறையில் ஒரு முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் முக கவசங்கள், தற்காப்பு உடைகள் உள்நாட்டில் மட்டுமல்லாது உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும்.

இவர்களின் சமீபத்திய தயாரிப்பான ஆன்டி வைரஸ் முகக்கவசம் வைரஸ் மற்றும் பாக்டீரிய தொற்றுகளில் இருந்து 99.01 % சதவிகிதம் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வகையிலும், கொரோனா போன்ற தொற்று கிருமிகளையும் இம்முகக்கவசத்தின் மீது பட்ட உடனே செயல் இழக்க செய்யும் வகையிலும், ஸ்விஸ் ரசாயன தொழில்நுட்பத்துடன் இணைந்து இந்தியாவில் முதன்மையாகவும் பிரத்யேகமாகவும் நம் நாட்டில் தயாரிக்கப்பட்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனையாகி வரும் இம்முகக்கவசம் சலவை செய்து பயன்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காவல் துறையினரின் பாதுகாப்புக்கு உதவும் வகையில் அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காவல் துறையினருக்கென்று பிரத்யேகமாக அவர்களுடைய சீருடை வண்ணத்தில் தயாரிக்கப்பட்ட சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான 5000 முகக்கவசங்களை கோவை நகர காவல்துறை ஆணையர் சுமித் சரணிடம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் காவல் துறை உயர் அதிகாரிகளும் நிறுவனத்தினரும் உடனிருந்தனர்.