EIA 2020 சட்டம் மற்றும் புதிய கல்வி கொள்கை ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும்

– மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

சமூக இடைவெளியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கோவை மாவட்டக்குழு கூட்டத்தில் புதிய கல்வி கொள்கை 2020 மற்றும் EIA சட்டம் ஆகியவற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநிலங்களில் உரிமை பறிப்பு, கல்வியை முழுக்க தனியாரின் வியாபாரப் பொருளாக ஆக்குவது, கல்வியை பிற்போக்குத்தனமாக அணுகுவது, சமூக நீதியை பறிப்பது மும்மொழி கொள்கையை திணிப்பது போன்ற உள்ளடக்கத்தை கொண்டிருக்கும் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை 2020ஐ திரும்பப்பெற வேண்டும் என்றும் ஏழை மக்களின் வீட்டு குழந்தைகளின் கல்வி கனவை நாசமாக்குகிற, தாய்மொழிக் கல்வியை நிராகரிக்கிற இக்கல்வி கொள்கை அமலானால் அது தேசத்தை பின்னுக்கு இழுக்கும் செயலாக அமையும் எனக் கருதுகிறோம் எனவே கோவை மாவட்ட மக்கள் ஒன்றுபட்டு புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டும் என்பதை முதல் தீர்மானமாக எடுத்துக்கொண்டனர்.

மேலும் நாட்டின் இயற்கை வளங்களை பெரு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு  தாரை வார்க்கும் வகையில் தயாரிக்கப் பட்டுள்ள EIA சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.