கோவைக்கு அதிக மழைக்கு வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி கோவையில் 555 மில்லி மீட்டர் மழை பதிவானது சராசரியாக 36.68 மில்லி மீட்டர் மழை பதிவானது. மேலும், கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்புப் படையினர் இரு மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி நீலகிரி மாவட்டத்தில் 1816.7 மில்லி மீட்டர் மழை பதிவானது. சராசரியாக 62.64 மில்லி மீட்டர் மழை பதிவானது. இந்நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அரக்கோணத்திலிருந்து பேரிடர் மீட்புப் படையினர் சாலை மார்க்கமாக 5 வாகனங்களில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு விரைந்துள்ளனர்.