லட்சுமி விலாஸ் வங்கியின் காலாண்டு நிதி நிலை முடிவுகள்

கோவை, ஜூன் காலாண்டில் லட்சுமி விலாஸ் வங்கியின் செயல்பாட்டு லாபம் ரூ .0.09 கோடியாக இருக்கிறது, இது 2019 ஜூன் காலாண்டில் செயல்பாட்டு இழப்பு ரூ .25.55 கோடியாக இருந்தது. 2020 ஜூன் காலாண்டில் நிகர இழப்பு ரூ .112.28 கோடியாக உள்ளது. இது 2019 ஜூன் காலாண்டில் நிகர இழப்பு ரூ .237.25 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வணிகம் ரூ. 37,471 கோடி, 30.6.2020 நிலவரப்படி, மொத்த வைப்புத் தொகையில் காசா 28.44 சதம் ஆக அதிகரித்துள்ளது.

தென் இந்தியாவைச் சேர்ந்த தனியார் துறை வங்கியான லஷ்மி விலாஸ் பேங்க், 30 ஜூன் 2020 உடன் முடிந்த முதல் காலாண்டு நிதி நிலை முடிவுகளை அறிவித்துள்ளது. அதன் விவரம் :
வழங்கப்பட்ட மொத்தக் கடன்கள், 30.06.2019 -ல் ரூ. 20,556 கோடியாக இருந்தது. 2020 ஜூன் 30-ல் ரூ. 16,310 கோடியாக உள்ளது.
மொத்த வைப்புத்தொகை சுமார் ரூ.1,376 கோடி குறைந்து ரூ.974 கோடியாக உள்ளது. இது, 30 ஜூன் 2019 நிலவரப்படி ரூ. 2,350 கோடியாக இருந்தது.
செலவு, வருமானத்துக்கான விகிதம், 2020 ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிந்த முதல் காலாண்டில் 99.95 சதம் ஆக உள்ளது.
ஜூன் 30, 2020 உடன் முடிந்த காலாண்டில் நிகர வட்டி லாபம் 1.58 சதம் ஆக உள்ளது. இது ஜூன் 30, 2019 உடன் முடிந்த காலாண்டில் 1.65 சதம் ஆக உள்ளது இது, மார்ச் 31, 2019 உடன் முடிந்த நிதி ஆண்டில் 1.11 சதம் ஆக இருந்தது.