சிங்காநல்லூர் கொரோனா சிகிச்சை மையம் ஆய்வு

கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு அதனை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் பறக்கும் படையினருடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக சிங்காநல்லூரில் அமைக்கப்படவுள்ள கொரோனா சிகிச்சை மையத்தினை ஆய்வு செய்தார்.

இதன் தொடர்ச்சியாக தடுப்பு நடவடிக்கைளில் ஒன்றாக கே.ஜி. வீதி பகுதியில் சாலையின் முன்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சாலையின் ஒரு பகுதியில் மட்டும் வாகனங்களை நிறுத்தவும் உத்தரவிட்டார். மேலும், அண்ணா நகர், முத்துத்தமிழ் நகர், தண்ணீர் பந்தல் 4 வது வீதி ஆகிய இடங்களில் நடைபெற்ற மருத்துவ முகாம்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து சிங்காநல்லூர் திருச்சி சாலையில் அமைக்கப்படவுள்ள கொரோனா சிகிச்சை மையத்தினையும் அதில் செய்யப்பட்டிருக்கும் படுக்கை வசதிகள் மற்றும் இதர வசதிகளையும் பார்வையிட்டார்.