கோவையில் உச்சம் தொட்ட தொற்று

கோவையில் கடந்த ஜூன் முதல் வாரம் முதல் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 238 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாளுக்குநாள் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் இதுவரை ஒரே நாளில் 174 பேருக்கு அதிகபட்சமாக தொற்று ஏற்பட்டு இருந்தது. இதனை தாண்டி இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கோவையில் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்த நிலையில் கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாநகருக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும்  கொரோனா பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கோவையில் கடந்த ஜூன் முதல் வாரம் முதல் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 238 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாளுக்குநாள் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் மத்திய பாதுகாப்பு படை வீரர் உள்பட இதுவரை இல்லாத வகையில் 238 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே செயல்பட்டு வரும் மத்திய பாதுகாப்பு படை முகாமில் உள்ள 36 வயது வீரருக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்ததால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்துள்ளார். இங்கு மேற்கொண்ட பரிசோதனையில் இவருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மற்ற வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் ராக்கிப்பாளையத்தில் செயல்பட்டு வந்த நகை தயாரிப்பு நிறுவனத்தில் 8 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பணியாற்றி வரும் 43, 30 வயது ஆண் பணியாளர்கள், மேட்டுப்பாளையம் காவலர் குடியிருப்பை சேர்ந்த 8 வயது சிறுமி ஆகியோருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ராமநாதபுரம், சிங்காநல்லூர், பீளமேடு மற்றும் நஞ்சுண்டாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை சேர்ந்த தலா 1 செவிலியர்களுக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் குனியமுத்தூரில் 9 பேருக்கும் , போத்தனூரில் 8 பேருக்கும் , மதுக்கரையில் 8 பேருக்கும், குரும்பப்பாளையத்தில் 8 பேருக்கும், பிளமேடு பகுதியில் 7 பேருக்கும், குறிச்சியில் 6 பேருக்கும், சென்னப்பசெட்டி புதூரில் 7 பேருக்கும், கரும்புக்கடை பகுதியில் 5 பேருக்கும், கோவைப்புதூரில் 4 பேருக்கும் மேலும் பல பகுதிகளை சேர்ந்த 238 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,777 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை ஒரே நாளில் 174 பேருக்கு அதிகபட்சமாக தொற்று ஏற்பட்டு இருந்தது. இதனை தாண்டி இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதே போல் கோவையில் இன்று மட்டும் ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த 55 வயது பெண், தெலுங்குபாளையம் புதூர் சக்தி விநாயகர் கோயில் வீதியை சேர்ந்த 60 வயது முதியவர், காந்தி பூங்கா பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர், கோவை எம்.ஜி.வீதியை சேர்ந்த 59 வயது ஆண், இது தவிர திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த 64 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில்சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 198 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.

கோவையில் கொரோனா பாதிக்கப்பட்ட 2,777 பேரில் 44 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், 1,463 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,270 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.