மன்னிப்பு கேட்ட பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்

பேஸ்புக் வலைதளம் பயன்பாட்டுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், யூதர்களின் வருடாந்திர புனித தினத்தையொட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் அதன் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர், நான் உருவாக்கிய சமூக வலைதள கட்டமைப்பான பேஸ்புக் மற்றும் அதன் செயல்பாடுகள், மக்களைப் சேர்ப்பதற்குப் பதிலாக பிரித்து விட்ட தருணமே நிகழ்ந்துள்ளது. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னை மேம்படுத்திக் கொண்டு சரியாக செயல்பட முயற்சிக்கிறேன் என மார்க் ஜூகர்பெர்க் வருத்தம் தெரிவித்துள்ளார்.