தமிழ் ஆர்வலர் கருமுத்து தியாகராஜன்

கலைத்தந்தை என்று போற்றப்பட்ட கருமுத்து தியாகராஜன் செட்டியார் 1893 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தார்.

இவர் இலங்கையில் கொழும்பு புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கையின் மலையக தோட்டத் தொழிலாளர் நலன்களுக்காக அங்கு பத்திரிக்கை ஒன்றையும் தொடங்கி நடத்தினார்.

இந்தியா திரும்பிய தியாகராஜன் மதுரையில் மீனாட்சி மில் என்ற தொழில் நிறுவனத்தை நிறுவினார். நூல் ஆலையும், நெசவு ஆலையும் அமைத்தார். தொடர்ந்து பல ஊர்களில் நூற்பு ஆலைகளை நிறுவினார்.

இவர் தமிழ் மீது தனி ஆர்வம் காட்டி வந்தார். இளம் வயதிலேயே புத்தகம் படிப்பதிலும் தமிழ் இலக்கண, இலக்கியங்களிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். இதன் காரணமாக தூய தமிழில் ‘தமிழ்நாடு’ என்னும் நாளிதழை பல ஆண்டுகள் நடத்தி வந்தார்.

கலைத்தந்தை, வள்ளல், தொழில் மேதை என்றெல்லாம் போற்றப்பட்டவரான கருமுத்து தியாகராஜன் செட்டியார் 1974 ஆம் ஆண்டு மறைந்தார்.