உலகை அறிவோம்…!!

உலகிலேயே நைஜீரியா நாட்டில் தான் இரட்டைக் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.

அமெரிக்காவில், சாண்டா கிளாஸ் என்று மூன்று நகரங்கள் உள்ளன.

உலகின் 90 சதவீத நன்னீர் அண்டார்டிக்காவில் உள்ளது.

அண்டார்டிக்காவில் 2 ஏடிஎம் இயந்திரங்கள் மட்டுமே உள்ளன.

உலகின் மிகப்பெரிய தீவு, கிரீன்லாந்து.

உலகின் மிகப் பழமையான அஞ்சல் அலுவலகம் ஸ்காட்லாந்தில் உள்ள சான்கர் ஆகும்.

சீனப் புத்தாண்டு 15 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.

நமீபியா நாட்டில் பாலைவனமும், கடலும் சந்திக்கிறது.

உலகின் முதல் நீருக்கடியில் உள்ள டென்னிஸ் அரங்கம் துபாயில் அமைந்துள்ளது.

மொரிஷியஸ் தீவு, ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ளது.

வாடிகன் நகரம் உலகிலேயே மிகச்சிறிய நாடு ஆகும்.

மனிதர்களின் கைரேகைகளைப் போல ஒவ்வொரு புலியிலும் உள்ள கோடுகள் தனித்துவமானது.

தங்க மீனால் அதன் கண்களை மூட முடியாது. ஏனென்றால், அதற்கு கண் இமைகள் இல்லை.

அட்டைப் பூச்சிகளுக்கு 32 மூளைகள் உள்ளன.

செவ்வாய் கிரகத்தில், சூரிய அஸ்தமனம் நீல நிறத்தில் இருக்கும்.

சிங்கப்பூரில் சூயிங்கம் தடை செய்யப்பட்டுள்ளது.

நார்வேயில், நரகம் என அழைக்கப்படும் ஒரு நகரம் உள்ளது.

பெலாரஸின் தலைநகரம் மின்ஸ்க் ஆகும்.

நிலவாழ் விலங்குகளின் இரண்டாவது பெரிய விலங்கு நீர் யானை ஆகும்.

யோகா 5,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றியது ஆகும்.

பொலிவியா நாட்டில் 37 அதிகாரப்பூர்வ மொழிகள் உள்ளன.