புதிய ‘டிரிக்கர் டெய்லி’ இயற்கை அங்காடி துவக்கம்

கோவை காரமடை டீச்சர்ஸ் காலனி பகுதியில் பொதுமக்களுக்குத் தேவையான அன்றாட மளிகைப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்ட புதிய ‘டிரிக்கர் டெய்லி’ விற்பனையகத்தை சத்தியபாமா பாலகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். இவருடன் நிர்வாக இயக்குநர் ஸ்ரீ ராமலு, முதன்மை நிர்வாக அதிகாரி ராஜகோபாலன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கொரோனா காரணமாக வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றுவிட்டதால், உள்ளூர் மக்களுக்கு வேலை கிடைக்கும் விதமாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நல்ல ஊதியத்துடன் பணி வழங்கி வருகின்றனர். லாப நோக்கத்திற்காக இல்லாமல் வேலை வாய்ப்புகள் தருவதற்காக இதனை செய்துள்ளனர்.

ஆபத்துக் காலங்களில் பாதுகாப்பாக இருக்கவேண்டியது நமது கடமை. அதேபோல் இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும் முறையான பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த கொரோனா, நமக்கு பணம் முக்கியமில்லை, ஆரோக்கியமும் மனமகிழ்வும்தான் முக்கியம் என்பதைக் கற்றுக்கொடுத்துள்ளது. தற்பொழுது இந்த கிளையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 50 கிளைகள் திறக்கத் திட்டமிட்டுள்ளனர், பிறகு இதனை இந்தியா முழுவதும் துவங்கவும் திட்டம் உள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.