திறந்த வெளி திரையரங்குகளுக்கு அமோக வரவேற்பு

திரையரங்குகள் என்றாலே ஒரு பெரிய ஒளி புகாத கூடாரத்தில் பெரிய திரையில் ஓடும் காட்சிகளை கண்டு கழிப்பதுதான் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. ஆனால், அதற்கு மாற்றாக திறந்த வெளி திரையரங்கின் மீதான ஆர்வம் இந்த கொரோனா காலத்திற்கு பிறகு அதிகரித்து கொண்டிருக்கிறது.

ஊரடங்கால் சினிமா துறை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் இதனை சரிசெய்யும் விதத்தில் பிரேசில் நாட்டில் காரில் இருந்தவாறு திரைப்படங்களை பொதுமக்கள் குடும்பத்துடன் கண்டு களித்து வருகின்றனர். இதன்மூலம் சமூக இடைவெளி கடைபிடிப்பதுடன் கொரோனா தொற்றிலிருந்தும் தற்காத்து கொள்ளலாம் என்பதால் பிரேசிலில் இதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.