பெண்களின் வாழும் வழிகாட்டி கிரண் பேடி

இந்தியாவின் முதல் பெண் போலீஸ் அதிகாரி கிரண் பேடி 1949ஆம் ஆண்டு ஜூன் 09ஆம் தேதி பஞ்சாப் மாநில அமிர்தசரஸில் பிறந்தார்.

இவர் 1972ஆம் ஆண்டு இந்திய காவல்துறையின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். மேலும் மக்கள் மேம்பாட்டிற்காக விஷண் பவுண்டேசன், நவ்ஜோதி ஆகிய அமைப்புகளை நிறுவியுள்ளார்.

1979ஆம் ஆண்டு காவல்துறை வீரப் பதக்கம், போதைப் பொருள் தடுப்பு பணிகளுக்கான நார்வே நாட்டு விருது, பிலிப்பைன்ஸ் நாட்டின் மகசேசே உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

மேலும் இவர் டென்னிஸ் போட்டியில் ஆசிய அளவிலும், தேசிய அளவிலும் ஏராளமான பரிசுகள், பதக்கங்களை வென்றுள்ளார். இவர் ஏராளமான சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.

இவர் பல ஆண்டுகளுக்கு மேல் காவல்துறையில் மகத்தான சேவை ஆற்றியுள்ளார். 2016ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றார். அங்கும் பல புரட்சிகளை செய்து வருகிறார்., வீரத்திலும் ஆற்றலிலும் அறிவிலும் சிறந்து விளங்கி இன்றைய பெண்களுக்கு வாழும் வழிகாட்டியாக திகழ்கிறார்.