இந்துஸ்தான் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி பி.காம்.(சி.ஏ) துறை சார்பாக கிரிஸ்டல்-2017 என்ற சர்வதேச கருத்தரங்கு இன்று (22.9.17) நடைபெற்றது. இக்கருத்தரங்கில் “கார்ப்பரேட் கம்பெனிகளில் மாணவர்கள் எவ்வாறு தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு தனது வேலைவாய்ப்புகளைப் பெற முடியும் என்பன குறித்தும் மிகவும் விளக்கமாக கூறப்பட்டது. இக்கருத்தரங்கில் சர்வதேச அளவில் இருந்து 112 பல்கலைக்கழகங்களில் இருந்து 1183 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

மாணவர்கள் மட்டுமல்லாமல் மேற்கு ஆப்பிரிக்காவின், புளு கிரேஸ்ட் பல்கலைக்கழகத்தின் பயிற்சி வகுப்புகளின் துறைத்தலைவர் விபின்சந்திரசெல்வராஜ், வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் மார்க்கெட்டிங் டிவிசன் துறையின் பேராசிரியர் மற்றும் குழு உறுப்பினர் டாக்டர் கணேசன், பெங்களூரின் பி.எம்.எஸ் பொறியியல் கல்லூரியின் மேலாண்மைத் துறையின் அசிசோசியேட் பேராசிரியர் டாக்டர். மனோகரன் மற்றும் பெங்களூரின் ஐ.எப்.ஐ.எம். பிசினஸ் ஹெச். ஆர். மற்றும் ஆர்கனிசேசன் பிகேவியர் துறையின் தலைவர் சஜிகுரியன் ஆகியோரும் இச்சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்டு கார்ப்பரெட் கம்பெனிகளின் வளர்ச்சி மற்றும் அதன் மூலம் கிடைக்கப் பெறும் வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு மிக விளக்கமாக கூறினார்கள்.

மேலும் இக்கருத்தரங்கினை இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் தலைமை தாங்கினார். மேலும் ஹெபாசிட் லக்காக்கோ என்.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் கொச்சின் டாடா கன்சல்டன்சியின் துணை தலைவர் மற்றும் டெலிவரி மைய தலைவருமான கணேஷ்.பி.தம்பி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். மேலும் இக்கருத்தரங்கில் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயல் அறங்காவலர் மற்றும் செயலாளர் பிரியாசதீஸ்பிரபு, முதல்வர் சின்னதுரை, துறை தலைவர் லோகநாதன் அத்துறையின் பேராசிய பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.