தினகரன் சசிகலா சந்திப்பு!!!

தினகரனும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க் களும், இன்று (20.9.17) சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்க உள்ளனர்.

இன்று , சிறையில் இருக்கும் சசிகலாவை தினகரனுடன் சென்று, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் பார்க்க உள்ளதாக கடந்த வாரம் தங்க தமிழ்ச்செல்வன் கூறி இருந்தார். இதற்கிடையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் அதிரடியாக அறிவித்தார். சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து எம்.எல்.ஏ.,க்கள் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. திமுக தொடர்ந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வருகிறது.

இவ்வழக்கில் ஐகோர்ட் தரும் தீர்ப்பை பொறுத்து, சென்னை வந்துள்ள கவர்னர் வித்யாசாகர் ராவும் இன்று முக்கிய முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அரசியல் பரபரப்பான சூழலில் தினகரனும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும் சசிகலா சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், சசிகலாவை சந்திப்பதற்கு, அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும், சிறை நிர்வாகம் அனுமதிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.