கரையை கடக்கும் ஆம்பன் புயல்

ஆம்பன் புயல் இன்று கரையைக் கடக்கவுள்ள நிலையில் ஒடிசாவில் கடுமையான காற்று வீசி வருகிறது.

இது குறித்து தகவல் தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், இந்தப் புயல் மேற்கு வங்கத்திற்கும், பங்களாதேஷுக்கும் இடையே இன்று மதியத்திற்கு மேல் கரையைக் கடக்கும் என்று கூறியுள்ளது.

தற்போது ஒடிசாவின் பாரதீப் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆம்பன் புயல் மெல்ல நகர்ந்து மேற்கு வங்கத்தின் டிக்ஹா பகுதிக்கும், பங்களாதேஷின் ஹடியா தீவுக்கும் இடையே கரையைக் கடக்கும் எனத் தெரிவித்துள்ளது.

ஒடிசாவில் இதன் தாக்கம் துவங்கிவிட்டது என்பதாலும், இந்த புயல் கரை கடக்கும் மற்ற மாநிலங்களுக்கும் இதன் பாதிப்பு இருக்கும் என்பதால் மத்திய அரசு அதற்கான முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பேரிடர் மீட்பு படையினருடன் தயாராக உள்ளது என்று மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.