சியோமி Mi மேக்ஸ்2 இந்தியாவில் அறிமுகம்

சியோமி நிறுவனத்தின் Mi மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏற்கனவே வெளியிடப்பட்டது. முன்னதாக 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்ட நிலையில், இம்முறை 32 ஜிபி மெமரி கொண்ட மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை 6.44 இன்ச் 1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே மற்றும் 0.7 மில்லிமீட்டர் பெசல் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படுகிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர் கொண்ட Mi மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன் 5300 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் குவிக் சார்ஜ் 3.0 மற்றும் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

– 6.44 இன்ச் 1920×1080 பிக்சல் ஃபுல் எச்டி IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர்
– அட்ரினோ 506 GPU
– 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் சார்ந்த MIUI
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ், f/2.2 அப்ரேச்சர்
– 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
– கைரேகை ஸ்கேனர், இன்ஃப்ராரெட் சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி.டைப்-சி
– 5300 எம்ஏஎச் பேட்டரி மற்றும் குவிக் சார்ஜ் 3.0

4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட Mi மேக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் கருப்பு நிற பதிப்பு விலை ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் வாடிக்கையாளர்கள் ரூ.12,999 விலையில் அமேசான் மற்றும் Mi.com தளத்தில் புதிய சியோமி Mi மேக்ஸ் 2 விற்பனை செப்டம்பர் 20-ம் தேதி மதியம் 12.00 மணிக்கு நடைபெறவுள்ளது.