பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்

பாராளுமன்ற மக்களவை நெறிமுறை குழு தலைவராக பா.ஜனதா தலைவர் அத்வானியை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மீண்டும் நியமித்துள்ளார். குழுவின் மற்ற 14 உறுப்பினர்களும் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நெறிமுறைக்கு புறம்பாக செயல்படும் எம்.பி.க்களை பற்றிய புகார்களை இந்த குழு விசாரித்து சபாநாயகருக்கு சிபாரிசு செய்யும். தேவைப்பட்டால், சில எம்.பி.க்களின் செயல்பாடுகளை தானாக முன்வந்து விசாரிக்கும்.

தனிநபர் மசோதாக்கள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பான குழுவின் தலைவராக துணை சபாநாயகர் தம்பிதுரை நியமிக்கப்பட்டுள்ளார். அவர் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தை ஆராயும் குழுவின் தலைவராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.