கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் இனி கொரோனா பரிசோதனை

இந்தியாவில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கும் பொருட்டு தற்போது மத்திய சுகாதாரத்துறை ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதுவரை கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்தியாவில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்திருந்தது. இந்நிலையில் தற்போது மாவட்டம் வாரியாக கொரோனா அறிகுறிகள் இல்லாத நபர்களுக்கும் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறத்தப் பட்டுள்ளது. இந்த நடைமுறையின் மூலம் கொரோனா பாதிப்பை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் எனவும் மத்தியச் சுகாதாரத் துறை நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது.

இதன்படி இந்திய மாநிலத்தில் மாவட்டம் வாரியாக வாரத்திற்கு 200 பேர் வீதம் மாதத்திற்கு 800 பேருக்கு கொரோனா பரிசோதனையை நடத்த வேண்டும் எனவும் உத்தர விடப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் தோறும் 6 அரசு மருத்துவமனைகள் மற்றும் 4 தனியார் மருத்துவமனைகளை மாநில அரசுகள் தேர்வு செய்து கொள்ளுமாறு மத்தியச் சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.