காதுகேளாதோருக்கான சிறப்பு முக்கவசம்

கொரோனா வைரஸ் தாக்குதல் உலக அளவில் மிக பெரிய அச்சத்தை ஏற்படுத்திவருகிறது. இதிலிருந்து தற்காத்துக் கொள்ள முக்கவசம், சனிடைசர் போன்றவற்றை பயன்படுத்த உலக அளவில் அறிவுரைகள் வழங்கபட்டுள்ளது.

இதனால் பலரும் முக்கவசம் மற்றும் சனிடைசரை பயன்படுத்திவருகின்றனர். அதிகமானோர் பயன்படுத்தி வருவதால் இதன் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. இருப்பினும் மருத்துவ முக்கவசம் கிடைக்காவிட்டாலும் துணிகளில் செய்யபட்ட முக்கவங்களை பயன்படுத்தி வருகிறோம்.

இந்நிலையில் கருவிகள் பயன்படுத்தாத அதிகமான காதுகேளாதோர் உதடு அசைவை வைத்து தான் கண்டறிவார்கள். தற்பொழுது முக்கவசம் அணிவது கட்டயமாகபட்டுள்ள நிலையில், காதுகேளாதோர் மற்றவர்களுடன் உரையாட முடியாமல் தனிமையில் உள்ளதாக உணர்கிறார்கள்.

இதற்கான ஒரு தீர்வாக அமெரிக்கா கிழக்கு கென்டக்கி பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆஷ்லே லாரன்ஸ் என்ற மாணவி முக்கவசத்தில் வாய் பகுதியில் மட்டும் கண்ணாடி போல் வெளியில் தெரியும்படி உள்ள முக்கவசத்தை உருவாகியுள்ளார். மேலும் இதனை தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. இதே போல் கண் பார்வையற்றோர்கள் சமூக இடைவேளையை பின்பற்ற முடியவில்லை என்ற புகார் எழுந்தது. அதேபோல் இவர்களுக்கும் தீர்வுகள் கண்டறிவது அவசியம். இந்த காதுகேளாதோருக்கான சிறப்பு முக்கவசங்கள் நம் நாட்டிலும் வழங்கப்பட வேண்டும்.