இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது – உலக சுகாதார அமைப்பு

“கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும்”

மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு அலுவலகத்தில் ஆன்லைன் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது.

இது பாராட்டுக்குரியது என குறிப்பிட்டார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் எல்லோருக்கும் தேவையான தடுப்பூசியை உற்பத்தி செய்வது கடினம் என அவர் குறிப்பிட்டார்.

 

 

SOURCE : News 18 Tamil