ஜூன் 4 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு மறு தேர்வு

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வரும் ஜூன் 1 முதல் 12 வரை நடைபெறும் என்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத வாய்ப்பில்லாமல் போனவர்களுக்கு ஜூன் 4ல் மறு தேர்வு என்றும் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

மார்ச் 24  ஆம் தேதி நடைபெற்ற 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத வாய்ப்பில்லாமல் போனவர்களுக்கு ஜூலை 4 மறு தேர்வு நடைபெறும். விடுபட்ட 11 ஆம் வகுப்பு தேர்வு ஜூன் 2 நடைபெறும். இந்த தேர்வுகள் அனைத்தும் தனிநபர் இடைவெளியுடன் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகள் திறப்பது குறித்து தற்பொழுது வரை முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.