1025 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிய பையாக்கவுண்டர்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழக தோழர்கள் உதவிட வேண்டும் என கழகத் தலைவர் ஸ்டாலின் மற்றும் கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அறிவுறுத்தி இருந்தனர்.

அதன்படி கோவை மாநகர் மேற்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி, சரவணம்பட்டி பகுதி கழகத்தின், 28 வது வார்டு அண்ணா நகர், போயர் வீதி, ஆஸ்பத்திரி வீதி, கந்தசாமி நகர், சின்ன மேட்டுப்பாளையம் மற்றும் 30 வது வார்டு விளாங்குறிச்சி ரோடு, குமரன் நகர், அம்மன் நகர், ஷாஜகான் அவின்யூ, சி.டி.சி நகர் ஆகிய பகுதிகளில் வாழ்வாதாரம் பாதித்த குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி 8 வகையான காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை சரவணம்பட்டி பகுதி கழக பொறுப்பாளர் பையாக்கவுண்டர் வீடு வீடாக சென்று மக்களை நேரில் சந்தித்து 1025 குடும்பங்களுக்கு வழங்கினார்.

இதில் வட்ட கழகச் செயலாளர்கள் ரங்கசாமி (ஓம்முருகா), கதிர்வேல், மயில்சாமி, அரசூர் பூபதி, மாணவரணி சிவா(எ)பழனிச்சாமி, இளைஞரணி இளங்கோவன், பகுதி துணைச் செயலாளர் முரளி, சந்திரசேகர், சங்கீத் மணிகண்டன், அரங்கசாமி, ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் நவீன், ரமேஷ், வீராசாமி, வேலுச்சாமி, கந்தசாமி, சம்பத், கார்த்தி, பாபுராஜ், மனோகரன், செந்தில், அஸ்வந்த், சாமிநாதன், வசந்த், வீரபத்திரன், காளிச்சாமி, செல்வராஜ், கனகராஜ், செல்வம், பகவதி, சாமிநாதன், சிவபிரகாஷ், விஸ்வநாதன், தியாகராஜ், கதிர்வேல், மகாலிங்கம், டி.கதிர், கிரி, சி.கே.செல்வராஜ், கிருஷ்ணசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், கழக தோழர்களும் கலந்து கொண்டனர்.