எழை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய தமிழ்ப்புலிகள் கட்சி

கோவை மாநகர பகுதியில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்த எழை, எளிய மக்களுக்கு தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

கொரோனா வைரஸை கட்டுபடுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் வயது முதியோர்கள் போதிய வருமானம் இல்லாமல் உணவு தட்டுபாடு நிலவி வரும் சூழ்நிலையாக இருந்தது. இதனையறிந்த தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர  கவுண்டம்பாளையம் பகுதியில் வசிக்க கூடிய ஏழை, எளிய மக்களுக்கு  தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் வழிகாட்டுதலின் படி மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ் ராவணன் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அரிசி, எண்ணெய், காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளை தனிமனித சமூக இடைவெளியுடன் வழங்கப்பட்டது. இதில் தமிழ் புலிகள் கட்சியின் தோழர்கள் கலந்து கொண்டு அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.