ஒப்பற்ற உத்தமர், ஓய்வில்லா உழைப்பாளி ஜெ.ஆர்.டி

‘உழைப்போர் எல்லோரும் உயர்ந்தோரே, அவர் வாழ்வில் என்றும் உயர்வாரே’ என்னும் முதியோர் வாக்கிற்கேற்ப ஒரு சிலர்  தனது சுய முயற்சியால், கடின உழைப்பால் வாழ்வில் முன்னேற்றம்  காண்பது உண்டு. அந்த வெற்றிக்குப் பின்னால் அவர்களது பெற்றோரின்  ஆசியும் கிடைத்தால் அவர் வானுயர முன்னேற்றம் அடைவார் என்பதற்கு எடுத்துக்காட்டாக, நமது சமகால மாமணிதராக நம்மில் ஒருவராக வாழ்ந்து கொண்டிருக்கின்றார் JRD Realtross நிறுவனர் டாக்டர் ஜெ.ராஜேந்திரன். உழைப்பு, விடாமுயற்சி, ஆர்வம்,  தன்னம்பிக்கை கொண்டு சாதித்த சாதனையாளர்களால் ஒருவராக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

டாக்டர் ஜெ.ராஜேந்திரன், நாமக்கல் மாவட்டத்தில் எளிமையான குடும்பத்தில் பிறந்து, இளம் வயதில்  துன்பங்களை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருந்தார். அப்போது தானும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும், சாதனையாளராக வாழ வேண்டும், மற்றவர்களையும் வாழ வைக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடு நமது கொங்கு மண்டலத்தில் கால்பதித்தார். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்றாலும், வந்தாரை வாழவைக்கும் கொங்குநாடு என்றாலும் மிகையாகாது. கோவையில் சிறு ஹோட்டலில் பணியாளராக தன் வாழ்க்கையைத் தொடங்கினார்.

ஆரம்ப காலகட்டத்தில் சுயமாகத் தொழிலைத் துவங்க தாய் மற்றும் மனைவியின் தாலியை அடகு வைத்து, தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் உழைத்து,  தான்  ஆரம்பித்த தொழிலை முதலிடத்திற்கு கொண்டு சென்றுள்ளார். கடின உழைப்பும், நேர்மையும், தாய் தந்தை ஆசியுமே என்னை உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்று பெருமிதத்துடன் கூறுகிறார்.

பொதுவாக, சுயமாக தொழில் துவங்கும் பலர்  அதனைத் தொடர்ந்து  செய்வதில்லை. ஏனெனில் அதிலிருக்கும்  ஆபத்துக்கள்,பிரச்சனைகள், சிக்கல்கள். தோல்விகளைக் கண்டு பயப்படும் அவர்கள்  உடனே நட்டம் அடைந்தவரை போதும்  என்று ஏதோ ஒரு வேலைக்குச் சென்றுவிடுவர் அல்லது சோர்ந்து போய் விடுவர். வாழ்க்கையையே இழந்து விட்டோம் என்று மூலையில் முடங்கி விடுவர்.

ஆனால் தான் மேற்கொண்ட ரியல் எஸ்டேட் துறையில் பார்த்த, அனுபவித்த துன்பங்களையெல்லாம் படிக்கல்லாக மாற்றி, கடந்த 25 வருடங்களில் தனது நிறுவனத்தை ஒரு பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக உயர்த்தியுள்ளார் டாக்டர் ஜெ.ராஜேந்திரன். இவரது உழைப்பிற்கும், முன்னேற்றத்திற்கும் மரியாதை சேர்க்கும் விதத்தில்  பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

  1. 1997ல் ‘சிறந்த விளம்பரதாரர் விருது’.
  2. 1999ல் ’கலைக் காவலர் விருது’
  3. 2006ல் ‘பெஸ்ட் பில்டர் விருது’
  4. 2012ல் ஆஸ்திரேலியா பல்கலைக் கழகம் சார்பாக ‘கௌரவ டாக்டர் பட்டம்’
  5. இவரது நிறுவனத்திற்கு தமிழக அரசு ‘தரமான கட்டுமானத்திற்கான ISO சான்றிதழ்’ வழங்கியுள்ளது.

இதுமட்டுமல்லாது, மேலும் பல்வேறு விருதுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் போன்று தோல்விகளைக் கண்டு துயரம் கொள்ளாமல், பின்வாங்காமல்  மேற்கொண்ட தொழிலில் சாதித்துக் காட்டுபவர்கள்  ஒரு சிலரே.

முன்னர் ஒரு முறை இவரின் நேர்மையான உயர்வைக் கண்டு இவருக்கு மரியாதை செய்யும் விதத்தில்  நமது பத்திரிகை சார்பில் இவரை சிறப்பு பேட்டி கண்டபோது, “ரியல் எஸ்டேட் துறையில், கோவையில் நம்பர் ஒன் ஆக வேண்டும் என்பதே எனது லட்சியம்” என்று கூறியிருந்தார். இவருடைய அந்த இலட்சியப் பாதையில், தனது மகன் தீபக் விக்னேஸ்வரையும் சேர்த்துக் கொண்டார்.

“தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்ற வரிகளுக்கு ஏற்ப தந்தையின் ரியல் எஸ்டேட் துறையில், உயர்ந்ததொரு பொறுப்பை ஏற்றுக் கொண்டு தந்தையின் இலட்சியப் பாதையில் இவரும் பயணிக்க ஆரம்பித்தார். தற்போது பலரும் வியக்கும் வண்ணம், தொழிலில் நேர்மை, சிறந்த செயல்பாடு, கடின உழைப்பு என தந்தையும், மகனும் இணைந்து இன்று பிரம்மாண்டமான ஒரு தொழில் நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர்.

அதன்மூலம் கோவைப்புதூர் பகுதியில் ஓர்  வர்த்தகப் புலியாக ஒப்பற்ற தலைவராக, பலருக்கு ஒளி மயமான வாழ்வளித்த குடும்பமாக விளங்குகின்றது இவரது பணி.

இவர்களது வாழ்க்கை சுயமாக, எந்த பின்புலமும் இல்லாமல் சாதிக்க நினைக்கும்  பலருக்கு உதாரணமாகும். தான்  மட்டுமல்லாமல், தன்னைச் சார்ந்தவர்களையும் முன்னேற்றம் காணச் செய்த காணச் செய்த ஒப்பற்ற உத்தமர், ஓய்வில்லா உழைப்பாளி. மேலும்  பல வெற்றிகளைப் பெற்று  நல்லோர் வாழும் பூமியில் நல்லதொரு செழிப்பை உருவாக்க வேண்டும் என நமது பத்திரிகை சார்பாக வாழ்த்துகிறோம்.

  

மேகலா நடராஜன்

படங்கள்: பாலாஜி ரெமி.