பாரதி ஒரு பரவசம்

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரித் தமிழ்த்துறையும் பன்னாட்டு அரிமா சங்கங்களும் இணைந்து நடத்திய “பாரதி ஒரு பரவசம்” என்னும் மகாகவி பாரதி விழா இன்று(15.09.17) நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சிக்கு சங்கரா கல்லூரியின் முதல்வர் எச்.பாலகிருஷ்ணன் வரவேர்ப்புரையாற்றினார், மேலும் சிறப்பு விருந்தினர்களுக்குப் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கினார். அரிமா சங்கத்தை சேர்ந்த அரிமா.மகேஸ்வரிசற்குரு தலைமை உரையாற்றினார்.  அவ்வுரையில் பாரதியைப் போல் இன்றைய இளைஞர்களும் மாணவர்களும் தாய்மொழியின் மீது பற்று கொண்டவர்களாக இருக்க வேண்டும் மேலும் இன்றைய இளைஞர்களின் நல்வாழ்விற்கும் பெரியோர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக

அரிமா சங்க மாவட்ட ஆளுநர் அரிமா கே. காளிச்சாமி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மேலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய கலைமாமணி சாரதா நம்பி “ஆரூரன் நாதக்கனல்” என்னும் தலைப்பில் மகாகவி பாரதியைப்பற்றி பல அரிய கருத்துக்களைக் கூறியதோடு மாணவர்கள் அன்றாடம் செய்தித்தாள்களைப் படித்து உலக நிகழ்வுகளைப் பற்றி அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும், மேலும் நம் நாட்டில் மட்டுமே 36 கோடி இளைஞர்கள் உழைப்பாளர்களாகப் பொறுப்புள்ள குடிமக்களாக இருக்கின்றனர் என்றும், பாரதியைப் போன்று பன்மொழித்திறன் பெற்றவர்களாக இன்றைய இளைஞர்கள் உருவாக வேண்டும் என்றும் கூறினார். அரிமா பாலசுப்ரமணியம் நன்றியுரை வழங்கினார்.

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர் பி.எம்.அன்புசிவா ஒருங்கிணைப்பாளராக இருந்து நிகழ்ச்சியை சிறந்த முறையில் வழிநடத்தினார்.