பார்க் கல்வி குழுமங்களின் சார்பாக ஆசிரியர் தின விழா

கோவை பார்க் கல்வி குழுமங்களின் சார்பாக ஆசிரியர் தின விழா PCET கலையரங்கில்  சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு தொழில்கள் ஒரு மனிதனை பெருமைப்படுத்தும். அவற்றுள் ஆசிரியர் தொழிலானது எல்லாவற்றிலும் மேலானது. அறிவின் ஆதாரமாகவும் , ஞானத்தின் வெளிச்சமாகவும் மற்றும் கல்வியாளரின் வாழ்வாதரத்திற்கு நம்பிக்கையாக இருக்கிறது. பார்க் கல்வி குழுமங்கள் எப்பொழுதும் ஆசிரியர்களை என்றுமே கவுரவிக்க தவறியதில்லை. இந்த ஆண்டும் சுமார் 1500 பார்க் கல்வி குழுமங்களின் ஆசிரியர்களை  அழைத்து சிறப்பு செய்யப்பட்டது.

பார்க் கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி ஆர். அனுஷா கூறுகையில்: மாணவர்களுக்கு மனிதநேயத்தை கற்றுக்கொடுப்பதை வலியுத்தினார். மாணவர்களுக்கு நாம் அறிவை கற்ப்பிக்கிறோம் , புதுப்பிக்கிறோம். ஆனால் அறிவும் ஆற்றலும் சமுதாயத்திற்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பது ஆசிரியர்களின் பொறுப்பாகும் என்றும், இந்திய அரசாங்கத்தின் வரித்துறை கூடுதல் ஆணையாளர் மற்றும் வருவாய்த்துறை, நிதி அமைச்சகத்தின் அதிகாரி வி.நந்தகுமார் ஐஆர்எஸ், ஒவ்வோரு வருடமும் 1,00,000 ஆசிரியர்களை சந்தித்து பயிற்சி கொடுத்து ஊக்குவித்து திறமை மிகுந்த மாணவர்களை உருவாக்கி கொண்டு இருப்பதாக  கூறினார். அவரை உதாரணமாக எடுத்துக்கொண்டு நாமும் நமது மாணவர்களை அறிவு திறனுடனும் சமுதாய பொறுப்புடனும் வழி நடத்த வேண்டும் என்று  கூறினார்.

இவ்விழாவில் தலைமை உரையாற்றிய பார்க் கல்வி குழுமங்களின் தலைவர் பி.வி.ரவி

சிறப்பு விருந்தினரராக இந்திய அரசாங்கத்தின் வரித்துறை கூடுதல் ஆணையாளர் மற்றும் வருவாய்த்துறை, நிதி அமைச்சகத்தின் அதிகாரி வி.நந்தகுமார் ஐஆர்எஸ் பேசுகையில்: ஒவ்வோரு மாணவனின் வெற்றிக்கு பின்னாலும் அவரது பெற்றோர் மட்டுமல்ல ​

அவனை வளர்த்து வழி நடத்தும் ஆசிரியர்களின் பங்கும் சமமாக உள்ளதாக தெரிவித்தார்.

தமிழ்நாடு பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் Lt. ஈசன் எஸ்.பார்க் துரோணா 2017 விருது வழங்கி கவுரவிக்கபட்டது. இவர் தற்போது நிறுவனர் மற்றும் பயிற்சி தளபதியாகவும் சீருடை சேவை மையம் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து மாணவர்களுக்கு இராணுவத்தில் சேருவதற்கு பயிற்சியை கொடுத்து வருகிறார். தன்னுடைய இந்த மேன்மையான நிலைக்கு காரணம் தன்னுடைய ஆசிரியர்களே என்று  கூறினார். மேலும் பொறியியல், மருத்துவம்  மட்டும் தொழிலல்ல,​எவ்வளவோ மேன்மையான தொழில்கள் இருப்பதாகவும் அதை மாணவர்களுக்கு ஆசிரியர்களாகிய நீங்கள் எடுத்து உரைக்க வேண்டும் என்று  கூறினார்.

இந்த ஆண்டின் சிறப்பு நிகழ்ச்சியாக “பார்க் பிக்பாஸ்” எனும் நிகழ்ச்சி குதூகலத்துடனும், நகைசுவையாகவும் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் பலருடைய திறமைகளை வெளி கொண்டுவரும் விதமாக அமைந்து இருந்தது. பல வகையான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.