ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் ஃபேஷன் ஃபெஸ்ட் 2017

கோயம்புத்தூர், ஃபேஷன் ஃபெஸ்ட் 2017ன் நான்காவது சீசன் கோவையை சேர்ந்த ADF ஸ்டுடியோஸ் மற்றும் ஃபியூஷன் பால்கான் பொழுதுபோக்கு நிறுவனத்துடன் இணைந்து செப்டம்பர் 15, 2017ல் ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழ்த்த உள்ளது. இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆடை வடிவமைப்பு மற்றும் ஃபேஷன் துறை தொடர்புடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ADF ஸ்டுயோஸின் ஃபேஷன் டிசைனர் மனோஜ் சரவணன் கூறியதாவது :- “ஃபேஷன் ஃபெஸ்ட் ஒரு உலக சாதனை முயற்சியாகும் மற்றும் ஃபேஷன் துறையில் ஒரு வரலாற்றை உருவாக்குவதாகவும் இருக்கும்”.

மேலும் “கோயம்புத்தூர் ஃபேஷன் ஃபெஸ்ட் 2017ன் நான்காவது சீசன் என்கிற மிகவும் பிரீமியம் ஷோவில், வளர்ந்து வரும் வடிவமைப்பாளர்களை பேஷன் லேபிள்களை வெளிபடுத்த அழைப்பு விடுத்துள்ளோம். இந்நிகழ்ச்சி நாட்டில் பிரபலமான ஃபேஷன் நிறுவனங்கள் மற்றும் ஆடைத் தயாரிப்பு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற இத்துறை சார்ந்த மாணவர்களுக்கு ஒரு தளமாக விளங்குகிறது”.

15 ஃபேஷன் காட்சிகள் மற்றும் 135 டிசைனர் லேபிள்கள் காட்சிக்கு வைக்கப்படும் இந்நிகழ்வில் சுமார் 200 வடிவமைப்பு மாணவர்கள் தங்கள் திறமைகளைக் காண்பிக்கும் வகையில் பெயர்களை பதிவு செய்துள்ளனர் என்று மனோஜ் சரவணன் தெரிவித்துள்ளார்.