கே.ஐ.டி கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்

கே.ஐ.டி – கலைஞர்கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு, மத்திய அரசு அறிவித்த ஊரடங்கின் காரணமாக அவர்களின் கல்வி கற்பதில் எவ்வித இடர்பாடுகளும் ஏற்படாத வகையில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் யு.ஜி.சி இன் அறிவுறுத்தல் படி தங்களது இல்லங்களில் இருந்தே ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்துகின்றனர்.

இந்த வகுப்பிற்குத் தேவையான அட்டவணைப் பிரத்யேகமாக அந்தந்த துறைத் தலைவர்கள் மூலமாக தயாரிக்கப்பட்டு கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு  இ-மெயில் மூலமாக அனுப்பப்பட்டது. இதன்படி பேராசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் இருந்தே கே.ஐ.டி-மாணவர்களுக்கு கூகுள் க்ளாஸ் ரூம்(GOOGLE CLASS ROOM , ஜூம் க்ளோவூடு  (ZOOM CLOUD), தேசிய அளவிலான மேம்பட்ட கற்றல் நடத்தும் ஸ்வயம் (NPTEL)ஆகியவற்றை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கின்றனர். அத்துடன் அவர்கள் படிப்பதற்கு தேவையான பாடக்குறிப்புகள் மேலே குறிப்பிட்ட (APP)ஆப் மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் கல்வி கற்பதில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல்  மத்திய அரசாங்கம் அறிவுறுத்திய சமூக விலகல் உடன் தங்களது இல்லங்களிலிருந்து ஆர்வமுடன் பாடங்களை கற்கின்றனர்.

இத்துடன் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் தற்பொழுது பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு தங்களது தொழில்நுட்பக் கல்லூரியில் மேற்படிப்பு தொடங்குவதற்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஸ்காலர்ஷிப் தேர்வு ஆன்லைன் மூலமாக நடைபெறுகிறது.

இத்தேர்வில் பங்குப்பெற  மாணவர்கள் 18001232750 என்ற டோல் ஃப்ரீ(TOLL FREE) நம்பர்க்கு மிஸ்டுகால் கொடுத்தால் ஆன்லைன் தேர்வுக்கான லிங்க் அனுப்பி வைக்கப்படும் மேலும் இணையதளம் வாயிலாக தேர்வு எழுதுவதற்கு இந்த லிங்க் மூலமாக (Direct link: http://scholarshiptest.kitcbe.com) பதிவு செய்தால் அதன் மூலமும்  ஆன்லைன் தேர்வினை தங்களது இல்லங்களில் இருந்தே எழுதலாம். இத்தேர்வில் வெற்றிப் பெறும் மாணவர்களுக்கு சுமார் 5 கோடிக்கான கல்வி உதவித்தொகையைப்  பெறலாம் என கே.ஐ.டி – கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.