இந்துஸ்தான் கல்லூரியில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஆன்லைன் வகுப்புகள்

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இந்த நேரத்தில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

கோவை அவிநாசி ரோடு நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் பொன்னுசாமி பேசுகையில், கரோனா வைரஸ் பரவுவதால் அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகவே கல்லூரி மாணவர்களுக்கு இந்த நேரத்தில் படிப்பில் ஆர்வத்தை தூண்டும் வகையில், குறிப்பாக மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கக் கூடிய வகையிலும், ஆன்லைன் மூலம் வகுப்புகளும், பாடப்பிரிவுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாணவர்களின் பாடம் குறித்த மேலாண்மை, தனித்திறன், நேர மேலாண்மை, தொழில் மேலாண்மை, வணிகவியலின் அன்றாட முக்கிய பங்கு, டெக்னாலஜியின் எதிர்காலம் போன்ற தலைப்புகளில் மாணவர்களுக்கு ஆன்-லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த வகுப்புகள் அனைத்தும் துறைகளின் சார்பாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது அவை ஜும் மொபைல் அப்ளிகேஷன், கூகுள் கிளாஸ், ஐசிடி அகாடமி போன்ற ஆன்லைன் மூலம் மாணவர்கள் வகுப்புகளை நன்கு கற்று வருகின்றனர். மாணவர்கள் தற்போது அதிகமாக ஆன்லைன் மூலமே வேலைவாய்ப்பு தேர்வுகளை சந்தித்து வருகின்றனர்.

இவ்வகுப்புகளின் மூலம் அவர்கள் ஆன்லைனில் எவ்வாறு வகுப்புகளை கற்றுக்கொள்வது, ஆன்லைன் தேர்வுகளுக்கு வகுப்புகள் எவ்வாறு உதவுகின்றது போன்ற அனைத்தையும் நன்கு கற்றுக் கொள்கின்றனர்.
மேலும் இந்த ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு அவர்களுடைய துறைசார்ந்த படிப்பின் தொடர்ச்சி இருந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு துறைகளிலும் ஆன்லைன் மூலம் மிகச் சிறந்த வல்லுனர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப் படுவதால் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். மாணவர்கள் வகுப்பினை ஆண்ட்ராய்ட் போன், லேப்டாப் ஆகியவற்றை பயன்படுத்தி கற்று வருகின்றனர். பேராசிரியர்கள் இந்த வகுப்பிற்கான குறிப்புகளும், தேர்விற்கான கேள்விகளும் அதன் மதிப்பெண்களும் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகின்றது. இவ்வகுப்பில் பங்கேற்று பயின்று வரும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களுடைய துறை சார்ந்த சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மேலும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவருக்கும், மேம்பாட்டு திட்ட வகுப்புகளும் நடத்தப்படுகிறது. இவ்வகுப்புகளுக்கான அனைத்து அறிவுறுத்தல்களையும் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலர் பிரியா சதீஷ் பிரபு ஆகியோர் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது