தமிழ்நாட்டில் டோல்பி அட்மோஸின் வளர்ச்சி

இந்தியாவில், முதல் டோல்பி அட்மோஸ் பொருத்தப்பட்ட திரை 2012ல் சிவாஜி 3D திரைப்படத்தை வெளியிட்டு துவக்கப்பட்டது. இந்தியச் சந்தைக்குள் நுழைந்த நான்கு ஆண்டுக்குள் டோல்பி அட்மோஸ் பெருமளவில் புகழ் பெற்று, காட்சிப்படுத்துவோர், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் ஆகியோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தியாவில் 300 க்கும் மேற்ப்பட்ட திரைகளிலும் தமிழ்நாட்டில் மட்டும் 80 க்கும் மேற்பட்ட திரைகளிலும் டோல்பி அட்மோஸ் நிறுவப்பட்டுள்ளது.

மேலும் உலக அளவில் 2700க்கும் மேற்பட்ட டோல்பி அட்மோஸ் திரைகளில் நிறுவப்பட உள்ளது. 650க்கும் மேற்பட்ட படங்கள், 75க்கும் மேற்பட்ட நாடுகள், 150க்கும் மேற்பட்ட மிக்ஸிங் வசதிகள், 12ஆஸ்கார் விருது பெற்ற படங்கள், 2 தொழில்துறை விருதுகள், 300க்கும் மேற்பட்ட டோல்பி அட்மோஸ் திரைப்படங்கள் இந்தியாவில் பெரும்பாலான பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் டோல்பி அட்மோஸில் வெளியிடப்படுகின்றன.

டோல்பி அட்மோஸில் வெளியான முக்கிய தென்னிந்தியத் திரைப்படங்கள் விக்ரம்வேதா, பாகுபலி 2, சென்னை 28, இறைவி, விசாரணை, புலிமுருகன், சரைநோடு, யு டர்ன் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கது. மேலும், வெற்றிமாறன், ராஜீவ்ரவி, ப.ரஞ்சித், பவன்குமார், எஸ்.எஸ்.ராஜமௌலி, பாலா, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட சிறந்த இயக்குனர்களை தங்களது திரைப்படங்களில் டோல்பி அட்மோஸ் பயன்படுத்தியுள்ளது.