சமுதாயத்தில் பின்தங்கிய மக்களுக்கு எல்லா சலுகைகளும் கிடைக்க செய்வோம்

கோவை சுந்தராபுரத்தில் உள்ள செங்கப்ப கோனார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு போயர் சமுதாயத்தின் மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநிலத்தலைவர் பூபதி தலைமை தாங்கினார், கொள்கை பரப்பு செயலாளர் சௌந்தரராஜன் வரவேற்புரை ஆற்றினார், மாநில நிர்வாகிகள் நாகராஜ், சிவகுமார், தாமோதரன், சிங்கை கோபாலகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஓய்வுபெற்ற முன்னாள் தலைமைச் செயலர் டாக்டர் ராம மோகன ராவ் மாநாட்டை துவக்கி வைத்து பேசியதாவது “தமிழகத்தில் பின்தங்கிய அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து அவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் கிடைக்க செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சென்று சமுதாய தலைவர்களை சந்தித்து ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த மாதம் மதுரையில் பிரம்மாண்டமான பேரணி மற்றும் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களை சந்திக்க உள்ளோம். அரசியல் அதிகாரத்தில் இதுவரை பங்கேற்பு ஏதும் பெறாத மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ள பல்வேறு சமூகங்களை ஒன்றிணைத்து ஒரு மிகப்பெரிய சமுதாய அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். ஏழை என்றும் அடிமை என்றும் யாரும் இல்லை இந்த சமுதாயத்தில், என்ற நிலையை ஏற்படுத்துவது தான் எங்களது செயல்திட்டம் இதற்காக அனைத்து சமுதாயத்தில் உள்ள பெரும் செல்வந்தர்களும் தன் வருமானத்தில் நூற்றில் ஐந்து பங்கை ஏழை எளிய மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு செலவிட வேண்டும்.

தமிழகத்திலுள்ள ரெட்டியார், செட்டியார், யாதவர், நாயுடு, நாயக்கர், பிராமணர், அருந்ததியர் என பல்வேறு சமுதாய மக்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு கூட்டங்களை எதற்காக ஏற்படுத்த உள்ளோமதிருவள்ளுவர் வள்ளலார். காந்தியடிகள், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர். ராம் மனோகர் லோகியா, போன்ற மகத்தான சிந்தனையாளர்களை உள்வாங்கி இந்த நவீன காலத்திற்கு ஏற்ப செயல்திட்டங்களை உருவாக்கப்படும். இதற்காக ஊர் ஊராக சென்று மக்களை சந்தித்து சமுதாய ஒருங்கிணைப்பு உருவாக்குவோம்” என்று தெரிவித்தார்.

மாநாட்டில் கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த போயர் சமுதாய நிர்வாகிகள் மற்றும் சிறுபான்மையினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.