இந்துஸ்தான் கல்லூரியில் தேசிய அறிவியல் கருத்தரங்கு

கோவை ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி மின்னணுவியல் மற்றும் இயற்பியல் துறையின் சார்பாக இரண்டு நாள் தேசிய அறிவியல் தின கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் அமிர்தா பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியர் மற்றும் முன்னாள் டீன் – இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன கிருஷ்ணன் கலந்துகொண்டு விழாவினை துவக்கி வைத்து ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்டார். இந்த கருத்தரங்கில் 40 கல்லூரிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

முன்னதாக இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் மற்றும் செயலர் பிரியா சதீஷ் பிரபு குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர். இதில் முதல்வர் பொன்னுசாமி மற்றும் துறைத்தலைவர் கௌரிசங்கர் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.